வில் ஸ்மித்துக்கு அடுத்தபடியாக ஹீரோயின் கார்டூனில் வரும் ஹீரோயினை விட மிக அழகாகவே இருக்கிறார். ஹீரோவும், ஹீரோயினின் வேலைக்காரியும் கொஞ்சம் சுமார் தான். கார்டூனில் வரும் அலாவுதீன் போல சிறிதளவு உடற்பயிற்சி செய்து உடற்கட்டு கொண்டு வந்திருக்கலாம்.
மொழிபெயர்ப்பை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும் (நான் ஒரு ஆங்கில - தமிழ் மொழிபெயர்ப்பாளர் என்பதால் மட்டுமல்ல) ஏனென்றால், பாடல் வரிகளையும் கூட அவ்வளவு அழகாகவும், கலைநயத்துடனும் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். பழைய கார்டூன் கதையில் இருந்து சிறிதளவு பட்டிபார்த்து டிங்கரிங் வேலைகள் செய்யப்பட்டாலும் கதையின் கருவில் மாற்றமில்லை. இரண்டு லேசான உதட்டோடு உதடு முத்தக்காட்சிகள் இடம்பெறுகின்றன, ஆகவே குழந்தைகளோடு செல்பவர்கள் அதற்கேற்றபடி சற்று கவனமாக குழந்தைகளை வழிநடத்துங்கள். சிறுவயதில் இக்கதையை பார்த்தபோது புரியாத சில விஷயங்கள் இப்போது புரிகின்றன. பெண் குழந்தைகளின் சம உரிமை, அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை கோட்பாடு போன்றவை அழகாக பேசப்பட்டுள்ளன. The Secret-Rhonda Byrne புத்தகம் படித்தவர்களுக்கும் அலாவுதீன் கதையின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும். சிறிய படம் தான், ஆனாலும் மிக அழகாகவும், அட்டகாசமாகவும் படமாக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு மேல் கதையை நீங்கள் நேரில் தியேட்டரில் சென்று பார்ப்பது சாலச்சிறந்தது, ஏனென்றால் 3டி அனுபவம் இன்னும் என் கண் முன்னே நிற்கிறது

No comments:
Post a Comment