கோ, ஈ, போன்ற ஒற்றை தமிழெழுத்து திரைப்பட வரிசையில் ஜீவா நடித்துள்ள படம் ’கீ’.
ஹேக்கிங்கை மையமாக வைத்து இக்கதை எடுக்கப்பட்டுள்ளது. ஊரில் சில கொலைகள் ஒரு ஹேக்கரின் மிரட்டுதலால் நடைபெறுகின்றன. ஹீரோ ஜீவாவும் ஒரு ஹேக்கராக காட்டப்படுகிறார். இதற்கிடையே காமெடிக்காக ஆர்.ஜெ.பாலாஜியும் ஜீவாவுடைய அப்பாவாக வருபவரும் செய்யும் காமெடிகள் அவ்ளோ நல்லா இல்ல. ஜேம்ஸ் பாண்டு படங்களில் இரண்டு பெண்கள் முக்கிய பாத்திரத்தில் இருந்தாலும் கவர்ச்சிக்காக அதிகமாக பயன்படுத்துவார்கள், அதுபோல நிக்கி கல்ராணியும், அனாய்க்கா சோதியும் நடித்துள்ளனர். மர்மமான கொலைகளுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பதற்காக அனாய்க்கா சோதி நினைக்கிறார்.
படத்தின் தொடக்கத்தில் தேவையில்லாத மசாலாவும், காமெடிகளும் இருந்தாலும் டெக்னாலஜி பகுதி ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.
எப்படி ஜேம்ஸ்பாண்டு படத்தை வெறும் ஆக்ஷனுக்காக பார்க்க முடியாதோ அதேபோல இத்திரைப்படத்தையும் வெறும் டெக்னாலஜிக்காக மாத்திரம் பார்க்கமுடியாது.
Fair & Handsome, iPhone, Life Insurance விளம்பரங்கள், Tor Browser, பாட்ஷா ரஜினிகாந்த் முகம் போன்றவை அடிக்கடி திரையில் தோன்றுகின்றன.
டெக்னாலஜி தெரியாத பார்வையாளர்களுக்கு ஸ்வாரஸ்யம் குறைவாகவே இருக்கும்.
படத்தின் ஆரம்ப சீனில் ஒரு மின்மினிப்பூச்சியை தவளை விழுங்குகிறது, அதை ஒரு பாம்பு விழுங்குகிறது [ஒரு கொலையின் முடிவில் மற்றொரு கொலை]
கடைசி காட்சியில் வில்லனால் ஹேக்கிங் செய்யப்படும் ஸ்க்ரீனில் தவளை தெரிகிறது.
ஹீரோவுக்கும் வில்லன் அணிக்கும் நடக்கும் ஹேக்கிங் சண்டையின் இறுதியில் வில்லன் ஒரு எறும்பு தன் உணவை எடுத்துச் செல்லாமல் தடுக்க அதை சுற்றி ஒரு வட்டம் போடுவான்.
அந்த வானவேடிக்கை சீன் ரொம்ப நல்லாவே இருந்துச்சு
படத்தின் நடுவே வில்லனுடன் அவனிடம் காசு வாங்கி அடிவாங்கும் அடியாள் ஒரு கதை கூறுவான் அதுவும் ஸ்வாரஸ்யமாக இருக்கும்.

No comments:
Post a Comment