Public Domain Movies...PC power & potential chat/discussion/tech.

Movies List

Monday, 17 February 2020

கடைகுட்டி சிங்கம் விமர்சனம்


இந்த படத்தில் மொத்தமாக 5 நிமிடங்கள் விவசாயிகளின் முக்கியத்துவம், விவசாயிகளின் கஷ்டங்கள் கூறப்பட்டுள்ளன .
கதைப்படி ஹீரோ கார்த்தி மாதம் வெறும் 1.5 லட்சம் சம்பாதிக்கும் ஒரு ஏழை விவசாயி. சொந்தமாக ஏகப்பட்ட நிலம், சொத்துக்கள், வசதி வாய்ப்பு எல்லாம் இருக்கிறது. இரண்டு காளை மாடுகளும் இருக்கின்றன. ஏதாவது குடும்ப விழா வந்துட்டா ஒவ்வொரு குடும்ப அங்கத்தினருக்கும் 5 பவுன் தங்க சங்கிலி போட்வாப்ள. பாவம்.
ஹீரோயின் (வெள்ளக்காரி மாதிரி ஒரு பொண்ணு, பேருந்துல சந்திக்கிறார்). பார்த்த உடனே டூயட் (வெள்ளக்காரீ......), இதை கேட்டதும் கருப்பா இருக்கிற பொண்ணுங்க எல்லாம் Fair & Lovely கடைய தேடி ஓடனும். 50 காசு சில்லரைய கூட கேட்டு வாங்குறதால ஏழையோ, வேறு ஜாதியாவோ நீங்க நினைச்சு படத்த பாக்காம இருந்துடாதீய, அவளும் அவரும் ஒரே ஜாதி தான், இன்னும் சொல்லப்போனால் விவசாயத்தின் நண்பன் என கருதப்படும் Soda நிறுவனத்தின் முதலாளி மகள்.
இப்போ வில்லனுக்கு வருவோம். ஹீரோவோட மெகாசீரியல் குடும்பத்தின் குத்துவிளக்காக இருக்கும், ஹீரோவின் மாமன் மகள் வேறு சாதி மாணவன் ஒருவனுடன் சிரிப்பதை பார்க்கும் வில்லன், அவனுடைய ஆட்களை வைத்து அந்த மாணவனை அடிக்கிறான், இதை தட்டி கேட்கும் ஹீரோ காலேஜ் பசங்கள நம்பி தான் நாங்க எங்க பொண்ணுங்கள காலேஜுக்கு அனுப்புறோம், அவங்க அப்படி எதுவும் பண்ண மாட்டாங்க!என்னும் மாஸ் டயலாக் விடுகிறார். அதாவது வேற சாதி பசங்க லவ் பண்ண மாட்டாங்க, பாதுகாப்பா மட்டும் இருப்பாங்க என்னும் அருமையான கருத்தை வலியுறுத்துகிறார். ஒருவேள லவ் பண்ணா என்ன ஆகும்னு கேக்குறீங்களா, அடுத்து வருது...ஹீரோவோட அப்பா சத்தியராஜ் கிட்ட வேலைசெய்றவர் ஒரு தலித். அவரோட மகன் ஹீரோவோட சாதிய சார்ந்த ஒரு பொண்ண காதலிக்கிறார். அதற்காக அந்த பையனை வில்லன் கொலை செய்கிறான். இது தெரிய வந்த ஹீரோ தன் சொந்த சாதியை சார்ந்த வில்லனை போலீஸில் காட்டிக்கொடுக்கிறார். வில்லனோட மாமன் மகள் தான் ஹீரோயின்.
இந்த கொலைக்கு ஜாமீன் வழங்குவதற்கு முன்பாக மிக கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்குது. அது என்னன்னா தினமும் கையெழுத்து போட்டுவிட்டு, கருவாளி மரங்களை வெட்ட வேண்டும். சிறிது காலத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வரும் வில்லன், ஹீரோவை பழிவாங்க நண்பர்களுடன் திட்டம் தீட்டுகிறார். அதற்காக இதுவரை தமிழகத்தில் இதுவரை நடந்திராத பெரிய வன்முறையை நிகழ்த்த திட்டமிடுகிறார். கடைசியாக ஹீரோவின் அப்பாவுக்கு சொந்தமான 5000 வாழைமரத்தையும் ஹீரோவின் 2 காளைகளையும் கொலைசெய்கிறார். ஊரே திரண்டு ஒப்பாரி வைக்குது. காளையை தன் சொந்த தம்பியாக அல்லவா நினைத்தார் ஹீரோ தலித் கொல்லப்பட்ட சம்பவம் இனி நடக்காமல் எப்படி தடுக்கப்போகிறார், விவசாயி என்கிற விதத்தில் ஹீரோவுக்கு எந்த மாதிரியான பொருளாதார சிக்கல்கள், அரசாங்க பிரச்சனைகள் இதெல்லாம் வரும்னு எதிர்பார்த்து படம் பார்த்தீங்கன்னா, மன்னிக்கவும், இதுக்கப்புறம் படத்துல அப்படி எந்த காட்சியும் கிடையாது
படத்தின் இரண்டாம் பகுதி, ஹீரோ தன் குடும்பத்திலேயே தன் சாதியை சார்ந்த மாமன் மகள்களில் ஒருவரை அல்லது இருவரையும் திருமணம் செய்வாரா அல்லது குடும்பத்திற்கு வெளியே தன் சாதியை சார்ந்த பெண்ணை திருமணம் செய்வாரா? கொல்லப்பட்ட அந்த இரண்டு மாடுகளுக்காகவும் ஹீரோ எப்படி வில்லனை முட்டித்தள்ளுகிறார் என்பது தான் கதை. என்னை பொருத்தவரை இந்த படம் அறைவேக்காட்டுத்தனமாக இருந்த்து.

- ஜெயசீலன் சாமுவேல் 

No comments:

Post a Comment

Movie Reviews

Indian Movie Reviews