Public Domain Movies...PC power & potential chat/discussion/tech.

Movies List

Thursday, 20 June 2019

Shazam திரை விமர்சனம்



Supermanம் நான் தான் Captain Marvelஉம் நான் தான்
Marvel Comics உருவாகாத நேரம். DC உடைய சூப்பர்மேன் முன்பே பிரபலமான காலம். Fawcett Comics என்னும் நிறுவனம் Captain Marvel என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கி காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டது. ஆனால், தன்னுடைய Superman உடைய Copy தான் இந்த Captain Marvel என்று கூறி DC நிறுவனம் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றது. அந்நேரத்தில் Marvel நிறுவனம் உருவாகி Captain Marvel என்னும் வேறு கதாபாத்திரம் பிரபலமடையத் தொடங்கிவிட்டது. ஆகையால், Shazam என்கிற மந்திரச்சொல்லே (Solomon Hercules Atlas Zeus Achilles Mercury என்னும் கிரேக்க தெய்வங்களின் பெயர்களின் முதல் எழுத்து) DC காமிக்ஸ் வெளியிட்ட கதாபாத்திரத்தின் பெயராக மாற்றப்பட்டது.

இப்போது Shazam கதைக்கு வருவோம். அலாவுதீன் போல இக்கதையிலும் ஒரு தூய்மையான உள்ளத்தை தேடும் மந்திர சக்திகள் சிறுவனான கதை நாயகனிடம் வந்து சேர்கிறது, கதையின் வில்லனுக்கு அந்த சக்தி மறுக்கப்படும்போது அவன் மகா பெரிய வில்லனாக அவதரிக்கிறான். Supermanக்கு உண்டான அனைத்து சக்திகளும் Shazamக்கு இருக்கின்றன. Shazam என்கிற மந்திர சொல்லை உச்சரிக்கும்போது கதாநாயகனான சிறுவன் Superman போலவும், மீண்டும் உச்சரிக்கும்போது திரும்பவும் சிறுவனாகவும் மாறுகிறான். இன்னும் சில Shazam உறுப்பினர்களை நியமிக்க வேண்டிய பொறுப்பும் அச்சிறுவனுக்கு வருகிறது. வில்லனுக்கும் ஹீரோவுக்குமான சண்டைகள் ஸ்வாரஸ்யமாகவும் தமிழ் டப்பிங் மிகவும் நகைசுவையுடனும் உள்ளன. சிறுவர்கள் மிகவும் ரசிக்கக்கூடிய படம். 

No comments:

Post a Comment

Movie Reviews

Indian Movie Reviews